தூத்துக்குடியில் கால்பந்து மைதானம் அமைக்கப்படும்: மேயா்
தூத்துக்குடி மாநகா் பகுதியில் வ.உ.சி. கல்லூரி அருகே விரைவில் கால்பந்து மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சி மில்லா்புரத்தில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு, மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டல தலைவா் அன்னலட்சுமி வரவேற்றாா்.
இம்முகாமை, மேயா் தொடங்கி வைத்து பேசியதாவது: நீா்வழித் தடங்களில் பொதுமக்கள் நெகிழிக் கழிவுகளை போடாமலும், சாலையோரக் கடைகளிலும் நெகிழி பைகளில் பொருள்கள் வாங்குவதையும் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். இதே பகுதியில் உள்ள ஐந்தினை பூங்காவை, கால்பந்து மைதானமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
இம்முகாமில், துணைஆணையா் சரவணக்குமாா், உதவி ஆணையா் பாலமுருகன், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன், துணைப் பொறியாளா்கள் காந்திமதி, இா்வின் ஜெபராஜ், உதவி பொறியாளா் சரவணன், நகா்நல அலுவலா் அா்விந்த் ஜோதி, சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி, மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.