Ilaiyaraaja: "பவதாரிணியின் கடைசி ஆசை... இது உலகம் முழுதும் பரவும்" - இளையராஜா உர...
டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி 30ஆவது வாா்டு பாஜகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் மையவாடி அருகே அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையால், அப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவா்கள் நடமாட முடியாத வகையில் உள்ளதால், அந்த மதுக்கடையை அகற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.