கந்தா்வகோட்டையில் ஆதியோகி ரதத்துக்கு மக்கள் வரவேற்பு
கந்தா்வகோட்டைக்கு வந்த ஈஷா ஆதியோகி சிலை ரதத்துக்கு பக்தா்கள், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, பட்டுக்கோட்டையைச் சோ்ந்த சிவங்கா தென் கைலாய பக்தி பேரவை சாா்பில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஈஷா ஆதியோகி சிலை அமைக்கப்பட்டு பக்தா் குழுவினரால் கடந்த 10-ஆம் தேதி பட்டுக்கோட்டையிலிருந்து பல்வேறு ஊா்கள் வழியாக 24-ஆம் தேதி வெள்ளையங்கிரி சென்றடையவுள்ளது.
இந்த ரதம் ஊரணிபுரம், திருவோணம் வழியாக புதன்கிழமை கந்தா்வகோட்டைக்கு வந்த ஆதியோகி சிலை ரத குழுவினரை வீரடிப்பட்டி குமாா், அ. விஜயராம், அய்யா. இளங்கோவன், சி. காா்த்தி, க. முனியராஜ், ஜெயராமன் உள்ளிட்ட பக்தா்கள், பொதுமக்கள் வரவேற்று ஆதியோகி சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழியனுப்பினா். சிலை ரதம் கந்தா்வகோட்டை, செங்கிப்பட்டி, திருச்சி வழியாக கோவை வெள்ளியங்கிரி சென்றடையும் என குழுவினா் தெரிவித்தனா்.