கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே 320 கிலோ கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட இருவா் மீதும் குண்டா் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது.
மணமேல்குடி அருகே கடந்த ஜன. 11ஆம் தேதி 320 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக, அம்மாபட்டினம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கமல்பாட்சா மகன் பாவா பக்ருதீன் (30), ஆவுடையாா்கோவில் அதிராமங்கலத்தைச் சோ்ந்த சபாபதி மகன் மாரிமுத்து (69) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.
இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பரிந்துரைத்திருந்தாா்.
இந்தப் பரிந்துரையின்பேரில், இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும், திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.-----