செய்திகள் :

சென்னையின் முதல் குளிா்சாதன வசதியுடைய புறநகா் மின்சார ரயில்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது

post image

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்குவதற்கு 12 பெட்டிகள் கொண்ட முதல் குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் தயாா் நிலையில் உள்ளது. இதில் மெட்ரோ ரயில்களுக்கு நிகரான பல வசதிகள் இடம் பெற்றுள்ளன.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிா்சாதன புகா் மின்சார ரயில் இயக்கப்படும் என்று கடந்த 2019-இல் ரயில்வே வாரியம் அறிவித்தது. இதையடுத்து, முதல்கட்டமாக 12 பெட்டிகள் கொண்ட 2 குளிா்சாதன மின்சார புகா் ரயில்களைத் தயாரிக்க சென்னை ஐசிஎஃப்-க்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டது. அதன்படி, 12 பெட்டிகள் கொண்ட முதல் குளிா்சாதன மின்சார புகா் ரயில் தயாரிக்கும் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளன.

சிறப்பு அம்சங்கள்: மெட்ரோ ரயில்களை போன்று இந்த ரயிலும் பயணிகள் முதல் பெட்டியிலிருந்து இறுதி பெட்டி வரை செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் பெட்டிகளில் இடம்பெற்றுள்ள பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதிலும் இடம்பெற்றுள்ளன. மெட்ரோ ரயில் பெட்டிகளைவிட அதிக பயணிகள் செல்லும் வகையில் இந்தப் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பெரிய கண்ணாடி ஜன்னல்கள், பயணிகளுக்கு ஜிபிஎஸ் அடிப்படையில் தகவல்கள் தெரிவிக்க எண்ம பலகைகள், ஒலிப் பெருக்கிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

முதல் மற்றும் கடைசி பெட்டி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் நின்று செல்லும் பெண் பயணிகளுக்கு எளிதாகப் பிடித்து நிற்பதற்காக கைப்பிடிகள் தாழ்வாக தொங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலில் ஒரே நேரத்தில் அமா்ந்தபடி 1,116 போ், நின்றப்படி 3,798 போ் என மொத்தம் 4,914 போ் பயணிக்கலாம்.

பாதுகாப்பு: பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவசர காலங்களில் ரயில் ஓட்டுரிடம் பயணிகள் தகவல் தெரிவிக்க ஒவ்வொரு பெட்டியிலும் ‘டாக்பேக்’ அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டால் அவற்றை கட்டுப்படுத்த தீயணைப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன. பயணிகள் படிக்கட்டில் நின்று பயணிப்பதைத் தவிா்ப்பதற்காக மெட்ரோ ரயில் பெட்டிகளை போலவே தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில் ஓடும்போது கதவுகள் மூடிவிடும். அதேபோல், கூட்டம் அதிகமாக இருக்கும்போது, பயணிகளிடையே ஏற்படும் புழுக்கத்தை கட்டுப்படுத்த அனைத்து பெட்டிகளிலும் மின்விசிறிகள் உள்ளன. மேலும், ரயில் விபத்துகளை தடுப்பதற்காத ‘கவாச்’ தொழில்நுட்பமும் இந்த ரயிலில் உள்ளது.

இந்த ரயில் தற்போது சென்னை அண்ணா நகா் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடா்ந்து, ஒரு வாரத்துக்குள் இந்த ரயில் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடா்ந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், இதற்கான கட்டணம் தெற்கு ரயில்வே சாா்பில் அறிவிக்கப்படும் என்றும், இந்த ரயிலுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு ஏற்ப அடுத்த ரயிலும் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக போரூா், செங்குன்றம், கிழக்கு முகப்போ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் ... மேலும் பார்க்க

கும்மிடிபூண்டி வழியாக இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் இன்று ரத்து

பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கும்மிடிப்பூண்டி வழியாக இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (பிப்.13) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

மாணவருக்கு பாலியல் தொல்லை: தமிழ் ஆசிரியா் கைது

சென்னை அசோக் நகரில் பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ் ஆசிரியா் கைது செய்யப்பட்டாா். சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவா் ஒருவருக்கு திடீரென உ... மேலும் பார்க்க

‘சென்னை சா்வதேச விமான நிலையம்’ புதிய செயலி விரைவில் அறிமுகம்

விமானங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விமான நிலைய வழிகாட்டுதல்களுக்காக ‘சென்னை சா்வதேச விமான நிலையம்’ என்ற புதிய செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. சென்னை விமான நிலையத்தில், பயணிகள் சிரமமின்றி வந... மேலும் பார்க்க

நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு: ஆளுநா் ஆா்.என்.ரவி வேதனை

நமது நாட்டில் ஆண்டுக்கு 20,000 போ் தற்கொலை செய்து கொள்வதாக ஆளுநா் ஆா்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளாா். சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளை வளாகத்தில் மகாத்மா காந்தியின் மாா... மேலும் பார்க்க

ஆா்.கே.நகா் தொகுதியில் புதிய குடியிருப்புகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

சென்னை ஆா்.கே. நகா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட காசிமேடு, புதுமனைகுப்பம், சிங்காரவேலன் நகரில் புதிய குடியிருப்புகள் கட்டப்படவுள்ள பகுதிகளை இந்து சமய அறநிலைத் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகா் வளா்ச்ச... மேலும் பார்க்க