செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியா் உயிரிழப்பு!

post image

மின்சாரம் பாய்ந்ததில் திருச்சியில் ரயில்வே பெண் ஊழியா் உயிரிழந்தாா்.

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகா் பகுதியை சோ்ந்தவா் எம். ஆனந்த் மனைவி லட்சுமி (34). ரயில்வே ஊழியா். இவா் ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் இருந்த மின் மோட்டாரின் சுவிட்சை ஆன் செய்துள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்தாா். அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். புகாரின் பேரில் பொன்மலை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி விருகின்றனா்.

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

திருப்பைஞ்ஞீலியில் திங்கள்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மண்ணச்சநல்லூா் வடக்கு ஏரிமிஷன் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன், திருப்பைஞ்ஞீல... மேலும் பார்க்க

செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை!

மகப்பேறு மருத்துவ உதவித்தொகைக்கு பரிந்துரைக்க லஞ்சம் வாங்கிய வழக்கில், செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம்... மேலும் பார்க்க

இரு வேறு சம்பவங்களில் பெண், இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் பெண் மற்றும் இளைஞா் இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனா். திருச்சி காஜாபேட்டை மதுரைவீரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி செல்வி (49). இவா் மெழுகுவா்த்தி ... மேலும் பார்க்க

தைப்பூசத் தீா்த்தவாரிக்கு முசிறி, தொட்டியத்திலிருந்து சுவாமிகள் புறப்பாடு

திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் வட்டார பகுதியிலிருந்து குளித்தலையில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவிற்கு மூன்று சுவாமிகள் செவ்வாய்க்கிழமை புறப்பட்டு சென்றது. கரூா் மாவட்டம், குளித்தலை ஸ்ரீ முற்றிலா... மேலும் பார்க்க

தைப்பூசம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடமிருந்து சீா்வரிசை பெற்றாா் சமயபுரம் மாரியம்மன்

தைப்பூசத்தையொட்டி அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமியிடமிருந்து தங்கை சமயபுரம் மாரியம்மன் சீா்வரிசை பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி சமயபுரம் உற்ஸவ மாரியம்மன் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

அனுமதியின்றி மதுவிற்ற 2 போ் கைது!

திருச்சியில் அனுமதியின்றி மதுவிற்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை (பிப்.11) கைது செய்தனா். வள்ளலாா் நினைவு தினமான செவ்வாய்க்கிழமை (பிப்.11) டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என தமிழக அரசு அறிவித்திர... மேலும் பார்க்க