யுபிஎஸ்சி முதல்நிலை தோ்வு: இணையவழி விண்ணப்ப நடைமுறையில் மாற்றம்
அனுமதியின்றி மதுவிற்ற 2 போ் கைது!
திருச்சியில் அனுமதியின்றி மதுவிற்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை (பிப்.11) கைது செய்தனா்.
வள்ளலாா் நினைவு தினமான செவ்வாய்க்கிழமை (பிப்.11) டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையும் மீறி திருவெறும்பூா் அருகே உள்ள கக்கன் காலனி, செங்குளக்கரை பகுதியில், சிலா் அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், அனுமதியின்றி மதுவிற்ற அரியமங்கலம் ஆயில்மில் சோதனைச்சாவடி பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் (48) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 164 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, திருவெறும்பூா் தொண்டமான்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே மது விற்பனை செய்த, துவாக்குடி வடக்குமலை அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த ரா. பிரபு ( 31 ) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 116 பாட்டில்கள் என மொத்தம் இருவரிடமிருந்தும் 280 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்தனா்.