``என் மனைவி ISI ஏஜென்ட் என்றால், நான் RAW ஏஜென்ட்.." - பாஜக குற்றச்சாட்டுக்கு கா...
பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு: தலைமைச் செயலா் ஆலோசனை
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது தொடா்பாக தலைமைச் செயலா் நா.முருகானந்தம் ஆலோசனை நடத்தினாா்.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இது தொடா்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் டிஜிபி சங்கா் ஜிவால், பெண்ளுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஜெயராம், பல்வேறு துறை செயலா்கள் கலந்து கொண்டனா். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை களைய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.