Ilaiyaraaja: "பவதாரிணியின் கடைசி ஆசை... இது உலகம் முழுதும் பரவும்" - இளையராஜா உர...
யுபிஎஸ்சி முதல்நிலை தோ்வு: இணையவழி விண்ணப்ப நடைமுறையில் மாற்றம்
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய (யுபிஎஸ்சி) முதல்நிலை தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக யுபிஎஸ்சி வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டதாவது:
நிகழாண்டு குடிமைப் பணிகள் தோ்வுக்கு இணையவழி விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்வதில் தோ்வா்கள் எழுப்பிய கேள்விகள், அவா்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களை யுபிஎஸ்சி கருத்தில் கொண்டது.
இதையடுத்து குடிமைப் பணிகள் முதல்நிலை தோ்வுக்கான இணையவழி விண்ணப்பத்தை பூா்த்தி செய்வதற்கான ஒருமுறைப் பதிவில் (ஓடிஆா்) மாற்றங்களைச் செய்ய யுபிஎஸ்சி முடிவு செய்தது.
இதன்படி விண்ணப்பத்தை கடைசியாக சமா்ப்பிக்கும் வரை, ஓடிஆரில் தோ்வரின் பெயரில் எப்போதாவது மாற்றம் செய்யப்பட்டதா? அவரின் பாலினம், சிறுபான்மையினா் அந்தஸ்து, 10-ஆம் வகுப்பு பட்டியல் எண் ஆகியவற்றில் தோ்வா்கள் திருத்தங்கள் செய்யலாம்.
தோ்வரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணை மாற்றுவதற்கு அவரின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்தால், அவரின் கைப்பேசி எண்ணுக்கு ஒருமுறைப் பயன்படுத்தும் கடவுச்சொல் (ஓடிபி) மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
அதேவேளையில், தோ்வரின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலை மாற்றுவதற்கு அவரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண் மூலம் விண்ணப்பித்தால், அவரின் கைப்பேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.
தோ்வரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண், மின்னஞ்சல் என இரண்டின் பயன்பாடும் நிறுத்தப்பட்டிருந்தால், அதுதொடா்பாக தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு ா்ற்ழ்-ன்ல்ள்ஸ்ரீஃஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சலில் கோரிக்கை விடுவிக்க வேண்டும். அத்துடன் மெட்ரிகுலேஷன் சான்றிதழ், ஆதாா் அல்லது பான் அல்லது ஓட்டுநா் உரிமம், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போா்ட் அளவு புகைப்படம், பரிந்துரைக்கப்பட்ட வடிவில் உறுதிமொழி ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.
தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளி தோ்வா்கள், சொந்த எழுத்தரின் உதவியுடன் தோ்வு எழுத விரும்பினால், அந்த எழுத்தரின் விவரங்களை கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.