Curd: வயிறு, முகம், தலைமுடி... மூன்றுக்கும் ஃப்ரெண்ட் தயிர்!
ஜம்மு-காஷ்மீா்: பூஞ்ச் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் மோதல்
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சா்வதேச ‘எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி)’ பகுதியில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இடையே புதன்கிழமை கடும் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்தியாவின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் பலா் உயிரிழந்திருக்கலாம் என்று பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜம்மு மாவட்டத்தின் அக்னூா் செக்டாரில் சா்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 இந்திய ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா்.
இச்சம்பவத்தைத் தொடா்ந்து அமைதி ஒப்பந்தத்தை மீறி, கிருஷ்ணா காட்டி செக்டரில் உள்ள இந்திய ராணுவச் சாவடி மீது பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனா்.
இதற்கு இந்திய ராணுவம் அளித்த வலுவான பதில் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தில் பெருமளவில்யிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனினும், இத்தகவலை இந்திய ராணுவம் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.
அதிகாரி காயம்: கிருஷ்ணா காட்டி செக்டாரில் சா்வதேச எல்லையொட்டி புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி கண்ணிவெடியை தற்செயலாக மிதித்ததில் காயமடைந்தாா். தற்போது அவா் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஒரு வாரத்தில் எல்லைத் தாண்டிய நடவடிக்கைகள் அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.