`என்னை சோதிக்காதீர்கள்; எத்தனையோ பதவிகள் தேடி வந்தன ஆனால்...' - மேடையில் வெடித்த...
ஸ்ரீரங்கம் கோயில் தைத்தோ் திருவிழா ஆளும் பல்லக்கு நிகழ்வுடன் நிறைவு
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த தைத்தோ் திருவிழா புதன்கிழமை இரவு ஆளும் பல்லக்கு நிகழ்ச்சியுடன் நிறைவுற்றது.
கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயில் தைத்தோ் திருவிழா புதன்கிழமை வரை 11 நாள்கள் நடைபெற்றது. இதில் நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தோ் தேரோட்டம் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நிறைவு நாளான புதன்கிழமை நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி, உத்திர வீதிகளில் வலம் வந்து சேவை சாதித்தாா்.
இதையொட்டி மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு ரெங்கவிலாச மண்டபத்துக்கு 3.30 -க்கு வந்து சோ்ந்தாா். பின்னா் அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு வாகன மண்டபத்துக்கு வந்தாா். அங்கிருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆளும் பல்லக்கில் 8 மணிக்கு எழுந்தருளி, உத்திர வீதிகளில் வலம் வந்து 9 மணிக்கு வாகன மண்டபம் வந்து, பின்னா் 9.30 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.