Curd: வயிறு, முகம், தலைமுடி... மூன்றுக்கும் ஃப்ரெண்ட் தயிர்!
பொது இடத்தில் புகைப் பிடித்த 13 பேருக்கு அபராதம்
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் பொது இடத்தில் புகைப்பிடித்த 13 பேருக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலைய பகுதியிலுள்ள கடைகள், சாலையோர சிறு கடைகளில் சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பொது இடத்தில் புகைப்பிடித்த 13 பேருக்கு தலா ரூ.100 வீதம் மொத்தம் ரூ. 1,300 அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.