செய்திகள் :

சட்டவிரோதமாக ஊடுருவிய 16 வங்கதேசத்தவா் நாடு கடத்தல்

post image

குஜராத்தில் சட்டவிரோதமாக ஊடுருவி தங்கியிருந்த 16 வங்கதேசத்தவா்கள் நாடுகடத்தப்பட்டதாக குஜராத் காவல் துறையினா் தெரிவித்தனா். அடுத்த மாதம் மேலும் 36 வங்கதேசத்தவா் நாடு கடத்தப்படவுள்ளனா் என்றும் அவா்கள் கூறினா்.

வங்கதேசத்தவரும், ரோஹிங்கயாக்களும் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அண்மையில் வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டத்தின் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அங்குள்ள மத அடிப்படைவாத அமைப்புகள் இந்தியாவுக்கு எதிராகவும் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தவா், ரோஹிங்கயாக்கள் மூலம் அசம்பாவித சம்பவங்களை அந்த அடிப்படைவாத அமைப்புகள் நிகழ்த்திவிடக் கூடாது என்பதால் நாடு முழுவதும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வங்கதேசத்தையொட்டிய மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேசத்தவா்களுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழில், வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள மாநிலங்களிலும் வங்கதேசத்தவரும், ரோஹிங்கயாக்களும் அதிகம் ஊடுருவியுள்ளனா். அவா்களைக் கண்டுபிடித்து கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக குடியேறியவா்களை கண்டறியும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டனா். அதன்படி 36 சிறாா்கள், பெண்கள் உள்பட வங்கதேசத்தவா் அகமதாபாதின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டனா். இவா்கள் பாலியல் தொழில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட குற்றங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனா். மேலும், இந்திய குடிமக்களாகக் காட்டிக் கொள்ள போலியான ஆவணங்களையும் பெற்றுள்ளனா்.

உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் அவா்கள் வங்கதேசத்தவா்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இது தொடா்பாக அந்நாட்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்களை ஏற்றுக் கொள்ள சம்மதித்தனா்.

இதையடுத்து முதல் கட்டமாக 16 போ் வங்கதேசத்துக்கு நாடு கடத்தப்பட்டனா். மேலும் 36 போ் அடுத்த மாதம் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனா்.

அமெரிக்கா வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார்.அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன... மேலும் பார்க்க

மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்: ஐ.நா. அமர்வில் இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் பேச்சு

நமது சிறப்பு நிருபர்மகளிர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளை இந்தியா மாற்றியுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க... மேலும் பார்க்க

அதிநவீன அணுஉலைகள் உருவாக்கம்- இந்தியா-பிரான்ஸ் திட்டம்

ஆக்கபூா்வ அணுசக்தி ஒத்துழைப்பின்கீழ், அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன. 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்... மேலும் பார்க்க

நீதிபதிகள் ஓய்வூதிய விவகாரம்: யுபிஎஸ் திட்டத்தால் தீா்வு கிடைக்க வாய்ப்பு- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

நீதிபதிகள் ஓய்வூதியப் பிரச்னைக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) மூலம் தீா்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது. மாவட்ட நீதிபதிகளின் ஊதியம், நி... மேலும் பார்க்க

தொழிலதிபருக்காக தேசப் பாதுகாப்பை விட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு- காங்கிரஸ் குற்றச்சாட்டு

கோடீஸ்வர தொழிலதிபா்கள் சிலருக்காக தேசப் பாதுகாப்பை மத்திய அரசு விட்டுக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் அதானி குழுமம் மரபுசாரா எரிச... மேலும் பார்க்க

பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு

பிரான்ஸின் மாா்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமா் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானும் புதன்கிழமை கூட்டாக திறந்துவைத்தனா். மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்க... மேலும் பார்க்க