செய்திகள் :

"செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வேன் எனச் சொன்னால்..!" - உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன?

post image

செந்தில் பாலாஜி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றதில் அதிருப்தியை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்றம், அமைச்சராக தொடர்வேன் என செந்தில் பாலாஜி சொன்னால், வழக்கின் விசாரணையை விரைவுப்படுத்துவோம் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வந்தனர். பிறகு கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில் உச்ச நீதிமன்றம் அவருக்கு கடந்த ஆண்டு பிணை வழங்கியது.

உச்சநீதிமன்றம்

அடுத்த நாளே அவர் அமைச்சராகவும் பதவி ஏற்றார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அப்படி வித்தியா குமார் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.

"செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள், அது குறித்து அமலாக்கத்துறை தெரிவித்து இருக்க கூடிய தகவல்கள் எல்லாம் மிகவும் தீவிரமானது. இதில் இன்னும் வழக்கு விசாரணை கூட முடியவில்லை. ஆனால் அவ்வளவு அவசரமாக செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றது ஏன்?" என கேள்வி எழுப்பியதோடு வழக்கில் தொடர்புடைய நபர் அமைச்சராக வந்தால், சாட்சியங்கள் அச்சப்பட மாட்டார்களா? பிறகு எப்படி வழக்கு விசாரணை நியாயமாக நடக்கும் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.

"ஏற்கனவே இது குறித்த எங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தோம். அதை செந்தில் பாலாஜி தரப்பு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. எனவே செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சராக தான் நீடிப்பேன் என்று சொன்னால் இந்த வழக்கை நாங்கள் விரைவாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டி இருக்கும்" என கூறினர்.

எனவே முடிவெடுக்க வேண்டியது செந்தில் பாலாஜி தான் என திட்டவட்டமாக கூறினர். அமலாக்க துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தடையியல் நிபுணர் உள்ளிட்ட பல சாட்சியங்கள் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தவரை வழக்கிற்காக நேரில் ஆஜர் ஆகி கொண்டிருந்தார்கள். அவர் பிணையிலிருந்து வெளிவந்து அடுத்த நாளை அமைச்சரான உடன், பயந்து போய் யாரும் தற்போது நீதிமன்றத்திற்கு வருவதில்லை என தெரிவித்தார்

இதனை அடுத்து செந்தில் பாலாஜி தரப்பு, அவர் அமைச்சராக தொடர்வாரா இல்லையா என்பதை நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி வழக்கின் விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Unnatural Sex: `மனைவியுடன் ஒப்புதலற்ற இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமல்ல' - நீதிமன்றம் சொல்வதென்ன?

சத்தீஸ்கர் மாநிலத்தில், இயற்கைக்கு மாறான உடலுறவால் பெரிட்டோனிடிஸ், மலக்குடலில் துளை போன்ற நோயால் பாதிக்கப்பட்டப் பெண் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சைய... மேலும் பார்க்க

கலாஷேத்ரா பாலியல் புகார்: "விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் தொடங்க வேண்டும் எனச் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட... மேலும் பார்க்க

RN Ravi: `ஒரே கேள்வியை தான் இரண்டு நாள்களாக உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்!’ - உச்ச நீதிமன்றம்

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் உச்ச நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டது.மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை ப... மேலும் பார்க்க

ஜெயலலிதா: ``என் அத்தையின் நகைகளை என்னிடமே கொடுக்க வேண்டும்..!" - உச்ச நீதிமன்றத்தில் ஜெ. தீபா

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்றார் முன்னாள் முதல்வர் ... மேலும் பார்க்க

`ஆளுநர் அதிகாரங்களை குறை மதிப்பிட்டு இருக்கிறார்கள்' - இறுதிக்கட்டத்தில் வழக்கு; இன்று நடந்தது என்ன?

இன்றும் தொடர்ந்த வழக்கு விசாரணை..!தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழ்நாடு அரசு உரிய உத்தரவுகளை பெற்று வருகிறது. தமிழ்நாடு ஆளுநரும் உச்ச நீதிமன்... மேலும் பார்க்க

"நான் அளித்த 1 லட்ச தீர்ப்புகளும் முருகன் கூறியதுதான்..." - சர்ச்சையைக் கிளப்பிய முன்னாள் நீதிபதி

காரைக்குடி நெற்குப்பை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம், தான் 28 ஆண்டுகளாக நீதித்துறையில் பணியாற்றி, ஒரு லட்சம் ... மேலும் பார்க்க