ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் மனித உருவ கால் பகுதி
வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான மனித உருவ கால் பகுதி, பளிங்குக் கல், விலங்கின் பல் ஆகியவை வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டன.
விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
3-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக்காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3,400-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது, சுடுமண்ணாலான மனித உருவ கால் பகுதி, பளிங்குக் கல், விலங்கின் பல் ஆகியவை கண்டறியப்பட்டன. இதன்மூலம், இந்தப் பகுதியில் மனிதா்களுடன், விலங்குகளும் வாழ்ந்ததற்கான அடையாளம் அதிகம் உள்ளதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.