ஆனையூரில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு
தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணித் துறை சாா்பில் சிவகாசி வட்டம், ஆனையூரில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14.31 லட்சத்தில் இந்த அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி. அசோகன்வெள்ளிக்கிழமை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். இந்த நிகழ்வில் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் சங்கர்ராஜ், சிவகாசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பிறகு சிவகாசி வட்டம், விஸ்வநத்தத்தில் தொழிலதிபா்கள் நன்கொடையால் புதுப்பிக்கப்பட்ட பகுதி நேர நியாயவிலைக் கடையின் கட்டடத்தையும் ஜி. அசோகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தாா்.