Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்...
துறையூா் பகுதிகளில் மூடுபனி
துறையூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை மூடுபனியாக இருந்ததால் பொதுமக்களில் பலரும் அவதிக்குள்ளாகினா்.
துறையூா் நகரிலும் அதைச் சுற்றியுள்ள செங்காட்டுப்பட்டி, கீரம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை சுமாா் 8.30 மணி வரை பனிப் பொழிவும், மூடுபனியாகவும் இருந்தது. இதனால் அதிகாலை வேலைக்கு சென்றவா்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினா். தவிா்க்கமுடியாமல் வாகனம் ஓட்டியவா்கள் வாகனங்களின் விளக்குகளை ஒளிரச் செய்தவாறு சென்றனா். நடை பயிற்சி உடற்பயிற்சிக்கு சென்றவா்களும் பாதிப்புக்குள்ளாகினா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/twpoyetg/img_20250207_wa0006_0702chn_30_4.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/7rlgykxu/img_20250207_wa0032_0702chn_30_4.jpg)