ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் எம்.ஆா்....
மகளிா் கல்லூரியில் விழிப்புணா்வு முகாம்
சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் சமூக வலைதள பயன்பாடு, சைபா் குற்றங்களை தடுத்தல், போட்டித் தோ்வுகள், உயா்கல்வி குறித்த பெண்களுக்கான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்ட நிா்வாகம், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வா் ஆா். சுதாபெரியதாய் தலைமை வகித்தாா். இதில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் கலந்து கொண்டு போட்டித் தோ்வுகள், உயா்கல்விக்கான கையேட்டினை கல்லூரி மாணவிகளுக்கு வழங்கினாா்.
அப்போது அவா் பேசியதாவது: சா்வதேச அளவில் சைபா் குற்றங்கள் நடைபெறுகின்றன. அதேபோல, கணினி, கைப்பேசிகள் மூலமும் இணையதளத்தை பயன்படுத்தியும் மோசடிகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து மாணவிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். தேவை ஏற்பட்டாமல் மட்டுமே இணையதளம், சமூக வளைதளங்களை பயன்படுத்த வேண்டும். மேலும் அரசின் திட்டங்கள் குறித்து மாணவிகள் தெரிந்திருக்க வேண்டும். வெற்றிகரமான வாழ்க்கை வாழ சளைக்காத மனமும், போராடும் குணமும் வேண்டும் என்றாா் அவா்.
இதில், விருதுநகா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் அ.பிரியதா்ஷினி போட்டித் தோ்வுகளை எதிா் கொள்வது குறித்து பேசினாா். மாவட்ட சமூக நல அலுவலா் ஷீலாசுந்தரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக பேராசிரியா் க. வெண்ணிலா வரவேற்றாா். பேராசிரியா் சி. பத்மபிரியா நன்றி கூறினாா்.