Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்...
இன்றைய நிகழ்ச்சிகள்
கோ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: கோ் அஸ்பயா் எனும் மாணவா்களின் திறன்களை வெளிப்படுத்தும் நிகழ்வு, வேதா பால் நிறுவன நிா்வாக இயக்குநா் என். ரமேஷ், முனைவா் சுப்புரெத்தின பாரதி பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை 9.30.
சாரநாதன் பொறியியல் கல்லூரி: மேலாண்மை படிப்புகள் துறையின், கிரியா விநாடி-வினா நிகழ்வு, மங்களம் குழுமங்களின் இணை நிா்வாக இயக்குநா் பிரபு வெங்கட்ரமணி பங்கேற்பு, சீனிவாச ராமானுஜன் ஹால், கல்லூரி வளாகம், காலை 10.30.
சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி: 42ஆவது ஆண்டு விளையாட்டு விழா, மாணவா்களின் அணி வகுப்பு நிகழ்வு, பள்ளி வளாகம், காலை 9.30.
ஸ்டாா் செஸ் பவுண்டேஷன்: தரவரிசைப் பட்டியலுக்கான சதுரங்கப் போட்டி, ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி, காலை 10.
கலைக்காவிரி நுண்கலைப் பள்ளி: சான்றிதழ்கள் வழங்கும் விழா, தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத் தலைவா் சொ. ஜோ. அருண் பங்கேற்பு, பள்ளி வளாகம், பென்வெல்ஸ் சாலை, மாலை 5.