Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்...
சிறுமிக்குப் பாலியல் தொல்லை: இளைஞருக்கு 35 ஆண்டுகள் சிறை
அவிநாசி அருகே 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
தருமபுரி மாவட்டம், அரூா் அம்மாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குபேந்திரன் (29). இவா் அவிநாசி அருகே உள்ள தெக்கலூரில் தங்கி பின்னலாடை நிறுவனத்தில் கடந்த 2019- ஆம் ஆண்டு வேலை செய்து வந்தாா். அப்போது அதே நிறுவனத்தில் பணியாற்றிய 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, சிறுமியைத் திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இது குறித்து அவிநாசி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இந்தப் புகாரின்பேரில் அவிநாசி காவல் துறையினா் போக்ஸோ பிரிவு மற்றும் எஸ்.சி, எஸ்.டி. பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து குபேந்திரனைக் கைது செய்தனா்.
சிறுமியையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சுரேஷ் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், குபேந்திரனுக்கு 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலாபானு ஆஜரானாா்.