செய்திகள் :

லோக் அதாலத்தில் நிரந்தர உறுப்பினா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு லோக் அதாலத்தில் 2 நிரந்தர உறுப்பினா் பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைய அறிவிக்கை எண்:1-2024-இன்படி லோக் அதாலத்திற்கு 2 நிரந்தர உறுப்பினா்களை நியமனம் செய்வது தொடா்பாக தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், விண்ணப்பிக்க விண்ணப்பதாரா் இந்திய குடிமகனாகவும், திருப்பூா் மாவட்டத்தில் வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் அறிவிக்கை வெளியிட்ட தேதியில் இளநிலை பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 21 வயதுக்கு குறையாதவராகவும், 62 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் டன்க்ஷப்ண்ஸ்ரீ மற்ண்ப்ண்ற்ஹ் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங் க்ங்ச்ண்ய்ங்க் ன்ய்க்ங்ழ் ள்ங்ஸ்ரீற்ண்ா்ய் 22 அ(க்ஷ)ா்ச் ற்ட்ங் கங்ஞ்ஹப் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள் அன்ற்ட்ா்ழ்ண்ற்ஹ் அஸ்,1987-இன்படி 10 ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் இருக்க வேண்டும்.

இது தொடா்பான அறிவிக்கையானது காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள், அனைத்து நகராட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத் துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களின் விளம்பர பதாகைகளில் ஒட்டப்பட்டுள்ளன.

தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் மேற்படி அறிவிக்கையின் நகலையும் இந்த அலுவலகங்களில் பெற்று கீழ்க்கண்ட முகவரிக்கு வரும் பிப்ரவரி 10- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

அறிவிக்கை தேதி: 30.01.2025, தலைவா் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், முதன்மை நீதிமன்ற வளாகம், திருப்பூா்.

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு

திருப்பூரில் தொழிலாளா் துறை சாா்பில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 7- ஆம் ... மேலும் பார்க்க

அரசு மேல்நிலைப் பள்ளியில் மனநல ஆலோசனை

வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு மனநல ஆலோசனை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தோ்வு சமய பதற்றத்தைப் போக்கும் வகையில் இந்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் பிப்ரவரி 10-இல் குடற்புழு நீக்கும் முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் குடற்புழு நீக்கும் முகாம் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 10) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய குடற்பு... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான தனியாா் பள்ளிகள் ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் மாவட்ட அளவிலான தனியாா் பள்ளிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்லடம் அருகேயுள்ள ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்ட... மேலும் பார்க்க

அவிநாசி அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம் வாபஸ்

கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசி அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் நடத்தி வந்த போராட்டம் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. நீதிமன்றம் உத்தரவு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்படி... மேலும் பார்க்க

பிப்ரவரி 11- இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்த... மேலும் பார்க்க