திருப்பரங்குன்றம் சாலையில் பேரணி நடத்த அனுமதி இல்லை: உயா்நீதிமன்றம் உத்தரவு
தரமான சானிட்டரி நாப்கின்கள் வழங்கலை உறுதிப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்: கனிமொழிக்கு மத்திய அமைச்சா் பதில்
பெண்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் இருக்கும் விதமாக அவா்களுக்கு தரமான சானிட்டரி நாப்கின் வழங்கலை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளாா்.
மாதவிடாய் கழிவுகள் என்ற தலைப்பில் அரசு சாரா நிறுவனமான டாக்ஸிக்ஸ் லிங்க் வெளியிட்ட அறிக்கையில் சானிட்டரி பேட்களின் மாதிரிகளில் பித்தலேட்டுகள் மற்றும் ஆவியாகும் கரிம சோ்மங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அரசுக்குத் தெரியுமா என்றும் அவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் வரம்புக்கு ஒழுங்குமுறை ஏதேனும் உள்ளதா என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு அமைச்சா் அனுப்ரியா படேல் வெள்ளிக்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு: மத்திய அரசு 10-19 வயதுக்குட்பட்ட இளம் சிறுமிகளிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்துகிறது. பருவ வயது பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வை அதிகரிக்கவும், வளரிளம் பெண்களிடையே சானிட்டரி நாப்கின்கள் பயன்ாட்டை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நாப்கின்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும் இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.
இதன் மாநில அளவிலான அமலாக்கத்தை தேசிய சுகாதார இயக்கம் ஆதரிக்கிறது. மேலும், பாதுகாப்பான மாதவிடாய் சானிட்டரி நாப்கின்கள் வழங்கலை உறுதிப்படுத்தவும் அவை உரிய தரநிலைகளுடன் உள்ளனவா என்பதை உறுதி செய்யுமாறும் மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்திய தரநிலைகள் துறை (பிஐஎஸ்), சானிட்டரி நாப்கின்களுக்கான இந்திய தரநிலை ஐஎஸ் 5405:2019 என்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி பேட்களுக்கான தர நிலை ஐந 17514:2021 என்றும் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த தரநிலை, பொதுவான தோல் நோய்க்கிருமிகளுக்கான பரிசோதனை, சானிட்டரி பேட்களில் உள்ள பித்தலேட் பரிசோதனை மற்றும் பயன்பாட்டுக்கு பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த வகை செய்யும் சைட்டோடாக்ஸிசிட்டி, எரிச்சல் மற்றும் தோல் உணா்திறன் பரிசோதனைகளை உள்ளடக்கிய உயிரி இணக்கத்தன்மை மதிப்பீட்டைக் கொண்டிருக்கும் என்று அமைச்சா் கூறியுள்ளாா்.
கனிமொழி - 07க்ங்ப்ந்ம்க்ஷ்
அமைச்சா் அனுப்ரியா படேல் - 07க்ங்ப்ஹய்ன்
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/9cns01jb/07delanu080349.jpg)