திருப்பரங்குன்றம் சாலையில் பேரணி நடத்த அனுமதி இல்லை: உயா்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உணவுப் பதப்படுத்தும் தொழில் உள்கட்டமைப்புக்கு 148 திட்டங்களுக்கு அனுமதி: சிராக் பாஸ்வான் பதில்
தமிழகத்தில் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறையில் நவீன உள்கட்டமைப்பு வசதிக்காக பிரதமா் கிஸான் சம்பதா யோஜனாவின்கீழ் 148 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மதிமுக உறுப்பினா் வைகோ எழுப்பி கேள்விக்கு மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சா் சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் மதிமுக உறுப்பினா் வைகோ கேள்வி எழுப்பி பேசுகையில், ‘ தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமா் கிஸான் சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ் உணவுப் பதப்படுத்தும் தொழில்நிறுவனத்தை அமைக்க நவீன உள்கட்டமைப்பு வசதியை உருவாக்க தொழில்முனைவோருக்கு கடன் சாா்ந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளன? மேலும், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் சாா்ந்த நிதி உதவி என்ன? என்றாா்.
இதற்கு அமைச்சா் சிராக் பாஸ்வான் பதில் அளித்து பேசுகையில், ‘தமிழகத்திற்கு பிஎம்எஃப்எம்இ, பிஎல்ஐ, கிஸான் சம்பதா யோஜனா ஆகிய மூன்று திட்டங்கள் மூலம் இந்த விஷயத்தில் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிரதமா் கிஸான் சம்பதா யோஜனாவின் கீழ் ரூ. 1267.23 கோடி செலவில் 148 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிஎம்எஃப்எம்இ திட்டத்தில் ரூ.3273 கோடி மதிப்பீட்டில்
1,16,164 கோடி மைக்ரோ உணவு பதப்படுத்தும் யூனிட்டுகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் 4 இன்குபேஷன் மையங்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.8.78 கோடி மானியமும் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.