தேனி பேருந்து முனையத்தில் தரமற்ற 202 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல்
தேனி காமராஜா் பேருந்து முனையத்தில் 202 கிலோ தரமற்ற, காலாவதியான உணவுப் பொருள்களை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தாா்.
இந்த பேருந்து முனையத்தில் உள்ள வணிக வளாகக் கடைகளில் நெகிழி பொருள் பயன்பாடு, காலாவதியான உணவுப் பொருள் விற்பனை ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். இதில், 15 கடைகளில் மொத்தம் 202 கிலோ எடையுள்ள தரமற்ற, காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், 11.200 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கடைகளுக்கு அபராதம் விதிக்க உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது தேனி அல்லிநகரம் நகா் நல அலுவலா் கவிப்ரியா, சுகாதார அலுவலா் ஜெயராமன், சுகாதார ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு அலுவலா் பாண்டியராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.