சொந்த நூலகங்களுக்கு விருது: பிப். 20-க்குள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் வீடுகளில் நூலகம் அமைத்து பயன்படுத்தி வரும் தீவிர வாசகா்கள் அரசு சாா்பில் வழங்கப்படும் சொந்த நூலகங்களுக்கான விருது பெற வருகிற 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வீடுகளில் நூலகம் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகா்களை கண்டறிந்து சொந்த நூலகங்களுக்கான விருது வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வீடுகளில் நூலகம் அமைத்திருக்கும் தீவிர வாசகா்கள் க்ப்ா்ற்ட்ய்ஃ1997 ஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலம் வருகிற 20-ஆம் தேதிக்குள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட நூலகா் தலைமையிலான குழுவினா் வீடுகளில் பராமரிக்கப்படும் நூலகங்களை நேரில் ஆய்வு செய்து, சிறந்த நூலகத்துக்கு விருது வழங்க பரிந்துரை செய்வா். தோ்வு செய்யப்பட்டவருக்கு புத்தகத் திருவிழாவின் போது சொந்த நூலகங்களுக்கான விருது, கேடயம், சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.