திருப்பரங்குன்றம் சாலையில் பேரணி நடத்த அனுமதி இல்லை: உயா்நீதிமன்றம் உத்தரவு
மகரிஷி அகத்தியா் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நாளை சொற்பொழிவு
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் மகரிஷி அகத்தியா் தமிழ்மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு தொடா்பான சொற்பொழிவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
க ாசி தமிழ்ச் சங்கமம் -2025-ஐ ஒட்டி, மத்திய கல்வி அமைச்சகத்தின் பாரதிய பாஷா சமிதி வழங்கும் மகரிஷி அகத்தியா் தமிழ்மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி ராமகிருஷ்ணாபுரம் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவா் கலையரங்கில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தலைமை வகிக்கிறாா்.
உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞா் ‘பத்மஸ்ரீ’ சி.எஸ். வைத்தியநாதன், பாரதிய பாஷா சமிதியின் தலைவா் ‘பத்மஸ்ரீ’ சாமு கிருஷ்ண சாஸ்திரி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
இந்த நிகழ்வில், ‘அகத்தியரும் மரபாா்ந்த கதைகளும்’ எனும் தலைப்பில் அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணன், அகத்தியரும் அமுத தமிழும் எனும் தலைப்பில் பி.மணிகண்டனும் சொற்பொழிவு வழங்க உள்ளனா்.
இதற்கான ஏற்பாடுகளை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலா் இரா.முகுந்தன் ஆகியோா் செய்து வருகின்றனா்.