காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க முகாம்
தேனி மாவட்டத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களில் வருகிற 10, 17 ஆகிய தேதிகளில் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழந்தைகள், பெண்களுக்கு ஊட்டச் சத்து குறைபாடு, ரத்த சோகை நோய் பாதிப்பை தடுக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்க வருகிற 10, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களிலும், 20 முதல் 30 வயது வரையுள்ள பெண்களுக்கு துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களிலும் முகாம் நடைபெறும். முகாமில் குடற்புழு நீக்கம் செய்ய அல்பெண்டசோல் என்ற மாத்திரை வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.