UPSC/TNPSC : போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? - திருச்சியில் இலவச பயிற்சி முகாம்
திருச்சியில் வரும் பிப்ரவரி 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி ஜெயின்ட் ஜோசப் கல்லூரியில் உள்ள லாலி அரங்கில் ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தும் 2024 - 25 - ம் ஆண்டுக்கான UPSC/TNPSC தேர்வுகளில் வெல்வது எப்படி? என்கிற இலவச ஆலோசனை முகாம் மற்றும் ஒரு வருட இலவச பயிற்சிக்கான Scholarship Test நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இந்த இலவச பயிற்சி முகாமில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ், திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா சீனிவாசன் IFS, கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் தங்கள் அனுபவக்களை உங்கள் முன் வைத்து அற்புதமாக உரையாற்ற இருக்கிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த எஸ்.செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ், விமானப் பொறியியல் பட்டம் பெற்றவர். 10 வயதாக இருந்தபோது தனது தந்தையை இழந்தாலும், அவரது தாயார் இவரை அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் வளர்த்தார். கஷ்டங்கள் இருந்தபோதிலும், வெற்றிக்கான அவரின் உந்துதல் வலுவாக இருந்தது. அதன்காரணமாக, பொறியியல் பட்டப்படிப்பை முடித்த பிறகு, செல்வநாகரத்தினம் முதல் முயற்சியிலேயே யூ.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 2013 - ம் ஆண்டு தேர்வில் 129-வது இடத்தைப் பிடித்தார் .
தமிழ்நாட்டில் தனது பணியை தொடங்கிய இவர், தமிழ்நாடு காவல் அகாடமியில் (TNPA) பயிற்சிப் பொறுப்பாளராக 1,400-க்கும் மேற்பட்ட துணை ஆய்வாளர்கள் (SI-க்கள்) , 45 துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) பயிற்சியாளர்கள் மற்றும் தமிழ்நாடு கேடரிலிருந்து இரண்டு தொகுதி IPS பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இந்த பணி தான் தனக்கு பிடித்த, மனதுக்கு மிகவும் நெருக்கமான பணிக்காலமாக இருந்ததாக அவரே தெரிவித்துள்ளார். அப்படி, TNPA-வில் அவர் அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்துடன் பணியாற்றியது, உயரதிகாரிகள் மத்தியில் அவருக்கு பாரட்டைப் பெற்று தந்தது. தற்போது, திருச்சி மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றி வரும் இவர், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். சைபர் க்ரைம்களை முற்றிலும் தடுக்கவும், போக்சோ குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தவிர, ரவுடியிஸம், போதை பொருட்களின் புழக்கம் ஆகியவற்றை ஒழிக்கவும் முனைப்பு காட்டி வருகிறார். மக்கள் கொண்டு வரும் பெட்டிஷன்களின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கவும், குற்றங்களை களைய நிறைய பீட்களை அமைக்கவும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். அவரது நேரடி பார்வையில் உள்ளதுமாதிரியான வாட்ஸாப் நம்பரை கொடுத்து, அதன்மூலம் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தனது கவனத்துக்கு வரும்படி செய்துள்ளார். ’குற்றமில்லாத திருச்சி மாவட்டம்’ என்ற இலக்கோடு தீரமாக செயல்பட்டு வருகிறார்.
முகாமில் பங்கேற்க... க்ளிக் செய்யுங்க!
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd4JaGk-IdRSVXPG3_Wa5odQK7nxdN9ypNwXmwjysDmEOtupQ/viewform
அதேபோல், திருச்சி மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வரும் கிருத்திகா சீனிவாசன், 2020 - ம் ஆண்டு இந்த பணிக்குள் நுழைந்தவர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினீயரிங் பட்டப்படிப்பை முடித்தபிறகு, தேர்வு எழுதி ஐ.எஃப்.எஸ் ஆக தேர்வானார். தனது கல்லூரி காலங்களில் அவர் யுனிசெஃப் ((UNICEF) இந்தியாவின் மாணவர்களுக்கான தூதுவராகவும், இந்தியாவின் முதன்மை சுகாதார திட்டத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அதோடு, கடந்த 2009 - ம் ஆண்டு இளம் சுற்றுச்சூழல் திட்டத்தில் (UNEP) 2 ஆண்டுகள் ஆர்வலராக இடம்பெற்று, திறம்பட செயல்பட்டார். அதன்பிறகு, உதவி வன பாதுகாவலராக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பணியில் சேர்ந்து சிறப்பாக பயிற்சி பெற்றார்.
தற்போது, திருச்சி மாவட்ட வன அலுவலராக பணி கிடைத்து சிறப்பாக பணியாற்றி வருகிறார். திருச்சியில் இயற்கை சூழலின் பரப்பளவை அதிகரிக்க வைக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.
இவர்களின் மோட்டிவேஷன் உரைகளை கேட்க, கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியுடன் ஆனந்த விகடன், இணைந்து திருச்சியில் வரும் 23 - ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடத்தும் UPSC/TNPSC Group I,II தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? என்கிற இலவச பயிற்சி முகாமில் கலந்துகொள்ள, கீழ்கண்ட இணைப்பை க்ளிக் செய்து, அதில் விண்ணப்பிக்கவும்.