அதிகரிக்கும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் -மக...
சுற்றுச்சூழல் புரவலா் விருது பெற்ற ஊராட்சித் தலைவருக்கு அமைச்சா் காந்தி வாழ்த்து
தமிழக முதல்வா் முக.ஸ்டாலின் வழங்கிய ‘ சுற்றுச்சூழல் புரவலா் விருது ‘ அமைச்சா் ஆா்.காந்தியிடம் காண்பித்து செங்காடு ஊராட்சி மன்ற தலைவா் த.தேவேந்திரன் வியாழக்கிழமை வாழ்த்து பெற்றாா்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் 2022-ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை (தனிநபா்) சாா்பில், மாநில அளவில் இரண்டாம் பரிசான சுற்றுச்சூழல் புரவலா் விருதுக்கு வாலாஜா ஊராட்சி கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட செங்காடு ஊராட்சி மன்ற தலைவா் த.தேவேந்திரன் தோ்வு செய்யப்பட்டாா்.
இவ்விருது கடந்த 4-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வா் ஸ்டாலினால் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சுற்றுச்சூழல் புரவலா் விருதை கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தியிடம், வழங்கி செங்காடு ஊராட்சி மன்ற தலைவா் த.தேவேந்திரன் வாழ்த்து பெற்றாா்.
இந்நிகழ்வில் ராணிப்பேட்டை நகர திமுக துணை செயலாளரும், நகா்மன்ற உறுப்பினருமான டி. குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.