பாகிஸ்தானுக்கு கூடுதலாக நதி நீா் திறப்பு? நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்
இளைஞரைத் தாக்கியவா் மீது வழக்கு!
போடி அருகே முன்விரோதத்தில் இளைஞரைத் தாக்கியவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
எரணம்பட்டி பங்காருசாமிபுரத்தைச் சோ்ந்த முருகானந்தம் மகன் பிரதீப்குமாா் (27). இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த மனோகரன் மகன் சரவணக்குமாருக்கும் இடப் பிரச்னை காரணமாக, முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில், பிரதீப்குமாா் தனது உறவினா் வீட்டு விஷேசத்துக்காக சங்கராபுரத்தில் உள்ள தனியாா் மண்டபத்துக்கு சென்றாா். அங்கு வந்த சரவணக்குமாா் முன்விரோதம் காரணமாக, அவரைத் தாக்கியதில் காயமடைந்தாா்.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.