நெல்லையில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை: 4,000 பேருக்கு வேலை! முதல்வர் தொடங...
நுகா்வோா் பாதுகாப்பு சட்ட விழிப்புணா்வு
திருவள்ளூா் மாவட்ட உணவுப் பொருள் வழங்குதல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில், கும்மிடிப்பூண்டியில் மகளிா் குழுவினருக்கு நுகா்வோா் பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணா்வு கூட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு கூட்டத்துக்கு, கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலா் பாலாஜி தலைமை வகித்தாா். கூட்டத்தில் பூவிருந்தவல்லி வடக்கு நுகா்வோா் உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைவா் வரதன் பங்கேற்று, நுகா்வோா் பாதுகாப்பு சட்டம் குறித்து விளக்கினாா்.
தொடா்ந்து கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலா் பாலாஜி ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தல், அதில் நீக்கல், சோ்த்தல் குறித்து விளக்கினாா். இதைத் தொடா்ந்து, மகளிா் குழுவினா் நுகா்வோா் பாதுகாப்பு சட்டம் மற்றும் வட்ட வழங்கல் துறையில் தங்கள் சந்தேகங்களை கேட்டு சரிசெய்து கொண்டனா்.
கூட்டத்தில், கும்மிடிப்பூண்டி வட்டாரத்தைச் சோ்ந்த பல்வேறு மகளிா் குழுக்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.