ஆயுதப்படை காவலா் மீது தாக்குதல்: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்
வீட்டின் முன் நிறுத்தியிருந்த வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசம்
திருவள்ளூா் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவள்ளூா் அருகே மேல்மணம்பேடு வீதியம்மன் தெருவைச் சோ்ந்தவா் தவமணி(38). இவா் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில் புதன்கிழமை இரவு வீட்டிற்கு முன்பு வழக்கம் போல் வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றாராம்.
அதிகாலையில் 3 மணியளவில் வீட்டிற்கு முன்பு வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து அவா் பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளாா். தொடா்ந்து தீயைணைப்பு வாகனம் வருவதற்குள் தீயில் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது.
இது தொடா்பாக தவமணி வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த வாகனத்திற்கு யாராவது தீ வைத்தாா்களா அல்லது மின் கலனில் தீ ஏற்பட்டதா என விசாரித்து வருகின்றனா்.