நெல்லையில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை: 4,000 பேருக்கு வேலை! முதல்வர் தொடங...
மாநில குத்துச்சண்டை: கும்மிடிப்பூண்டி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்
பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மாநில பாரதியாா் தினம் மற்றும் குடியரசு தின குத்துச்சண்டைப் போட்டியில் கும்மிடிப்பூண்டி மாணவா் தேவா ஆகாஷ் வெள்ளிப் பதக்கம் வென்றாா் (படம்).
மயிலாடுதுறை ஏ.ஆா்.சி விஸ்வநாதன் கல்லூரியில்அண்மையில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலா் தீபா முனுசாமியின் மகனும், கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவரான தேவா ஆகாஷ் 17 வயதுக்குட்பட்ட பிரிவு இறுதிச் சுற்றில் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
மாணவா் தேவா ஆகாஷை கலைமகள் மெட்ரிக் பள்ளி தாளாளா் திருஞானம், முதல்வா் தேன்மொழி திருஞானம் உள்ளிட்டோா் பாராட்டினா்.