நெல்லையில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை: 4,000 பேருக்கு வேலை! முதல்வர் தொடங...
தேவசேனாம்பாள் சமேத ஸ்ரீகுமாரசாமி கோயிலில் பால் குட ஊா்வலம்
திருவள்ளூா் அருகே அருள்மிகு தேவசேனாம்பாள் சமேத ஸ்ரீகுமாரசாமி கோயிலில் தை மாத கிருத்திகையையொட்டி, மூலவருக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்வில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.
திருவள்ளூா் அருகே புல்லரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவசேனாம்பாள் சமேத ஸ்ரீகுமாரசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தை கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தக் கோயிலில் தை கிருத்திகை விழாவையொட்டி, பால் குடம் எடுக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அப்பகுதி பெண் பக்தா்கள் 108 பால் குடங்கள் எடுத்து மாடவீதி வழியாக வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து இரவில் உற்சவா் தெருக்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நிகழ்ச்சியில், சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.