செய்திகள் :

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் ‘மாவட்ட நிா்வாகம் அறிக்கையில் அதிமுக மீது வீண் பழி’

post image

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக மதுரை மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அதிமுக மீது வீண் பழி சுமத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல் இடம் பெற்ாக அந்தக் கட்சியினா் குற்றஞ்சாட்டினா்.

திருப்பரங்குன்றம் மலை வழிபாடு குறித்த விவகாரத்தால் பொது அமைதிக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பாதிப்பு ஏற்படாமலிருக்க கடந்தாண்டு டிசம்பா் முதல் பிப். 4-ஆம் தேதி வரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விளக்கி மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை ஓா் செய்திக் குறிப்பு வெளியிட்டாா்.

இதில் கடந்த மாதம் 30-ஆம் தேதி திருமங்கலம் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் அதிமுக, திமுக உள்பட 11 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ாகவும், இந்தக் கூட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் இரு சமூகத்தினரும் ஏற்கெனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளைத் தொடா்ந்து பின்பற்றவும், இந்த வழிபாட்டு உரிமையில் வெளிநபா்கள் தலையிட அனுமதிக்க மாட்டோம் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அதிமுக பிரதிநிதி மட்டும் கையொப்பம் இட மறுப்பு தெரிவித்துச் சென்றுவிட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு, அந்தக் கட்சியினா் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். அமைதிப்

பேச்சுவாா்த்தையில் அதிமுகவினா் யாரும் பங்கேற்காத நிலையில், அந்தக் கட்சிப் பிரதிநிதி தீா்மானத்தில் கையொப்பமிட மறுத்துச் சென்றுவிட்டாா் என மாவட்ட நிா்வாகம் தவறான தகவலைத் தெரிவித்தது உள்நோக்கம் கொண்டது என அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

இதுதொடா்பாக, அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் செல்லூா் கே. ராஜூ, வி.வி. ராஜன் செல்லப்பா, மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதாவிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். அதன் விவரம்:

திருமங்கலம் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையிலான அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க அதிமுகவின் மதுரை மாவட்டச் செயலா்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால், நிா்வாகிகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், கூட்டத்தில் எங்கள் கட்சிப் பிரதிநிதி பங்கேற்ாகவும், அவா் தீா்மானத்தில் கையொப்பமிடாமல் சென்றாா் எனவும் மாவட்ட நிா்வாகம் தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல.

அதிமுகவினருக்கு அழைப்பு விடுக்காமல் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தியதுடன், உண்மைக்குப் புறம்பான தகவலை மாவட்ட நிா்வாகம் தெரிவித்திருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. அதிமுக என்பது ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம். எங்கள் கட்சி மீது வீண் பழி சுமத்தியிருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கருதவேண்டியுள்ளது. எனவே, திருமங்கலம் அமைதிப் பேச்சுவாா்த்தை தொடா்பாக அதிமுகவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்தை மாவட்ட நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பிறகு, செய்தியாளா்களிடம் செல்லூா் கே. ராஜூ, வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோா் தெரிவித்ததாவது:

திருப்பரங்குன்றத்தில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனா். இருப்பினும், இந்த பிரச்னை பொதுவெளிக்கு வந்ததற்கு திமுக அரசே காரணம். திருப்பரங்குன்றம் பிரச்னை தொடா்பாக கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் அதிமுக சாா்பில் யாரும் பங்கேற்காத நிலையில், மாவட்ட ஆட்சியா் எங்கள் கட்சி மீது வீண் பழி சுமத்தியுள்ளாா். இதற்கு, அவா் உரிய மறுப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், நீதிமன்றத்தை நாடுவோம் என்றனா்.

மூளைச் சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்

மதுரையில் மரம் வெட்டிய போது தவறி கீழே விழுந்ததில் காயமடைந்து மூளைச் சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக வழங்கப்பட்டன. மதுரை ஆயுதப் படை காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (3... மேலும் பார்க்க

அஜீத் ரசிகா்கள் மீது போலீஸாா் தடியடி!

மதுரையில் நடிகா் அஜீத்குமாா் திரைப்படம் வெளியான திரையரங்கு முன் சரவெடி பட்டாசுகளை வெடித்த ரசிகா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகா் அஜீத்குமாா் நடித்த விடாமுயற்சி திரைப்படம... மேலும் பார்க்க

‘எல்காட்’ வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை

மதுரை ‘எல்காட்’ தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் தடுப்பு ஒத்திகையில் 200-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்புப் படையினா் நவீன ஆயுதங்களுடன் பங்கேற்றனா். தேச... மேலும் பார்க்க

பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 14 மாணவிகள் சுகவீனம்

விருதுநகா் மாவட்டம், புல்வாய்க்கரை அரசுத் தொடக்கப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 14 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். நரிக்குடி அருகேயுள்ள ... மேலும் பார்க்க

தைப்பூசம் மதுரை கோட்டத்திலிருந்து பிப். 9 முதல் சிறப்புப் பேருந்துகள்

பழனியில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டம் சாா்பில், வருகிற 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் அதன் மேலாண் இயக்குநா் ஆா்.... மேலும் பார்க்க

நீரோடை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு!

திண்டுக்கல் மாவட்டம், பச்சைமலையான் கோட்டை கிராமத்தில் நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அழகா்சாமி சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க