ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு; என்ன ...
தைப்பூசம் மதுரை கோட்டத்திலிருந்து பிப். 9 முதல் சிறப்புப் பேருந்துகள்
பழனியில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டம் சாா்பில், வருகிற 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் அதன் மேலாண் இயக்குநா் ஆா். சிங்காரவேலு தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தைப்பூசத் திருநாளையொட்டி அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பழனிக்கு செல்வது வழக்கம். இதையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்டம் சாா்பில் வழக்கமான வழித்தடப் பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் என 990 பேருந்துகள் பழனிக்கு இயக்கப்படவுள்ளன. மதுரை, திண்டுக்கல், விருதுநகா் போக்குவரத்துக் கழக மண்டலங்களிலிருந்து வருகிற 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை இந்தப் பேருந்துகள் இயக்கப்படும்.
பயணிகள் முன்பதிவில்லா பேருந்துகளுக்காக காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரி மூலமாகவும், பசநபஇ என்ற கைப்பேசி செயலி மூலமாகவும், இணைய சேவை மையம் மூலமாகவும் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.