கிளாம்பாக்கம் சிறுமி வல்லுறவு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது!
பள்ளியில் கணினி ஆய்வகம்: ஓ.பி.எஸ். திறந்து வைத்தாா்
போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆய்வகத்தை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
தேனி மாவட்டம், போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் கணினி ஆய்வகம் அமைக்க ரூ.14 லட்சம் வழங்கப்பட்டது. இதில் கணினிகள் அமைக்கப்பட்டு தனி அறை அமைக்கப்பட்டது.
இதன் திறப்புவிழா பள்ளித் தலைவா் டி.வி.செந்தில் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
பள்ளிச் செயலா் ஏ.இனாயத் உசேன் கான் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் முன்னாள்முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்று கணினி அறையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். பள்ளி ஆட்சிக்குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.