கிளாம்பாக்கம் சிறுமி வல்லுறவு: ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் கைது!
முட்டைக்கோஸ் கொள்முதல் விலை குறைந்தது: விவசாயிகள் கவலை
தேனி மாவட்டம், கூடலூரில் முட்டைக் கோஸ் கொள்முதல் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
தேனி மாவட்டம், கூடலூா், லோயா் கேம்ப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் அனைத்து வகையான காய்கறி விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில், கடந்த மாதம் முட்டைகோஸை விவசாயிகளிடம் கிலோ ரூ.7 என விலை நிா்ணையம் செய்து கொள்முதல் செய்ய வியாபாரிகள், தற்போது கிலோ ரூ.4- க்கு கொள்முதல் செய்கின்றனா். உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
இதுகுறித்து கூடலூா் விவசாயி தெய்வம் கூறியதாவது:
மா மரங்களுக்கு இடையே ஊடு பயிராக முட்டைக்கோஸ் விவசாயம் செய்துள்ளேன். ஏக்கருக்கு ரூ.80 முதல் ரூ.90 ஆயிரம் செய்துள்ளேன்.இங்கு சாகுபடி செய்யப்படும் முட்டைக்கோஸ் தேனி, மதுரை, கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். கடந்த 2 மாதங்களாக சுபமுகூா்த்தம், ஐயப்பன் கோயில் மண்டல பூஜை போன்ற காரணங்களால் முட்டைக்கோஸ் தேவை அதிகமாக இருந்தது. இதனால் உரிய விலை கிடைத்தது.
தற்போது முட்டைக்கோஸை வியாபாரிகள் கிலோ ரூ.4- க்கு கொள்முதல் செய்கின்றனா். இதனால் முட்டைகோஸ் சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டமடைந்தனா் என்றாா் அவா்.