திராவகம் குடித்து முதியவா் தற்கொலை
ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை திராவகம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள பாப்பம்மாள்புரம் பால்காரத் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் தமிழ்செல்வன் (65). இவா் அல்சா் நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். வயிற்று வலி குறையாததால், மனமுடைந்த இவா் திராவகத்தை குடித்து மயங்கினாா்.
இதையடுத்து, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
இதேபோல, தேனியை அடுத்த வீரபாண்டி அருகேயுள்ள கோட்டூா் இமானுவேல் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் பாண்டி (65). இவா் மதுப் பழக்கத்தால் வயிற்றுவலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தாா்.
இதனால், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].