கிணற்றிலிருந்து மூதாட்டி உடல் மீட்பு
ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை கிணற்றிலிருந்து மூதாட்டியின் உடலை மீட்டு, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆண்டிபட்டி வட்டம், சித்தையகவுண்டன்பட்டி காமராசா் தெருவைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன் மனைவி திருமலம்மாள் (75). இவா் கண் பாா்வை குறைவுடன் வசித்த நிலையில், அவ்வப்போது வழி தவறிச் சென்றுவிடுவாராம்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் அழைத்து வந்து வீட்டில் விடுவா். இந்த நிலையில், திங்கள்கிழமை சித்தயகவுண்டன்பட்டி பகுதியில் தனியாா் தோட்டக் கிணற்றில் திருமலம்மாள் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த ஆண்டிபட்டி போலீஸாா் மூதாட்டியின் உடலை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.