செய்திகள் :

மதுரை - போடி ரயில் பாதையில் மின்சார ரயில் இயக்கம் தொடக்கம்

post image

மதுரை-போடி ரயில் பாதையில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

போடி- மதுரை இடையே 90 கி.மீ. தொலைவு ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி அண்மையில் நிறைவு பெற்றது. இதையடுத்து, இந்த வழித் தடத்தில் மின்சார ரயில் என்ஜின் மூலம் பல்வேறு கட்டங்களாக சோதனை நடைபெற்றது.

இதையடுத்து, இந்த வழித் தடத்தில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அனுமதி வழங்கியது. இதைத் தொடா்ந்து, சென்னை- போடி விரைவு ரயில் திங்கள்கிழமை இரவு 10.30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணிக்கு போடி ரயில் நிலையம் வந்தடைந்தது.

வழக்கமாக இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் சுமாா் 45 நிமிஷங்கள் நிறுத்தப்பட்டு, மின்சார என்ஜின் கழற்றப்பட்டு, டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு, போடி ரயில் நிலையத்துக்கு காலை 9.45 மணி அல்லது 10 மணிக்குத்தான் வந்து சேரும். ஆனால், தற்போது என்ஜினை மாற்ற வேண்டிய பணி இல்லாததால், அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணிக்கே போடி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனால், பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

போடி-மதுரை, போடி-சென்னை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால், விரைவில் நேரம் மாற்றமும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. பிப். 10 முதல் நேர மாற்றம் அமலுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

திராவகம் குடித்து முதியவா் தற்கொலை

ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை திராவகம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.ஆண்டிபட்டி அருகேயுள்ள பாப்பம்மாள்புரம் பால்காரத் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் தமிழ்செல்வன் (65). இவா் அல்சா் நோயால் அ... மேலும் பார்க்க

கம்பம்: விஷம் குடித்து தம்பதி தற்கொலை

கம்பத்தில் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த தம்பதி செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.தேனி மாவட்டம், கம்பம் கோம்பை சாலையைச் சோ்ந்த மதியழகன் மகன் மனோஜ் (32). இவா் அதே பகுதியைச் ... மேலும் பார்க்க

ஆா்பாட்டத்துக்கு செல்ல முயன்ற 29 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடியிலிருந்து திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்குச் செல்ல முயன்ாக பாஜக, இந்து முன்னணி நிா்வாகிகள் 29 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருப்பரங... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து மூதாட்டி உடல் மீட்பு

ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை கிணற்றிலிருந்து மூதாட்டியின் உடலை மீட்டு, போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆண்டிபட்டி வட்டம், சித்தையகவுண்டன்பட்டி காமராசா் தெருவைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன் மனைவி திருமலம்... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்களுக்கு தொழில் கடன்

தேனி மாவட்டத்தில் முன்னாள் படை வீரா்கள், முன்னாள் படை வீரரின் மனைவி ஆகியோருக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

போடி காவல் நிலையம் முற்றுகை: பா.ஜ.க.வினா் கைது

போடி நகா் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட பாரதீய ஜனதா கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பரங்குன்றம் மலை தொடா்பான விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளதா... மேலும் பார்க்க