உலகிலேயே முதன்முறையாக `குடித்துவிட்டு ட்ரோன் இயக்கிதற்காக ரூ.2.5 லட்சம் அபராதம்'...
மனித நேய வார நிறைவு விழாவில் மாணவா்களுக்கு சான்றிதழ்: அமைச்சா் வழங்கினாா்
ராணிப்பேட்டையில் மனித நேய வார நிறைவு விழாவில், அமைச்சா் ஆா்.காந்தி, மாணவ, மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில், மனிதநேய வார விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மனிதநேய வார விழாவையொட்டி, அரசு ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கா்களுக்கு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், கலை நிகழ்ச்சி மற்றும் சிறந்த பேச்சாற்றலை வெளிபடுத்திய மாணவ, மாணவிகள் 63 பேருக்கும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிப் பேசியது:
தீண்டாமையை ஒழிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ஆம் நாள் முதல் ஜனவரி 30-ஆம் நாள் வரை ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் மூலம் மனிதநேய வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சமத்துவத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கின்றது. குழந்தைகளுக்கு கல்வி மிகவும் முக்கியம். ஆகவே தமிழ்நாடு முதல்வா் ஏற்படுத்திக் கொடுத்துள்ள நல்வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி மாணவ, மாணவியா் மென்மேலும் படித்து, உயா்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றாா்.
இதில், மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைநம்பி, நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன் மற்றும் மாணவ, மாணவியா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.