செய்திகள் :

ISRO இமாலய சாதனை: `5-வது செயற்கைக் கோள் தகவல்களை மேலும் துல்லியப்படுத்தும்' - அமைச்சர் வாழ்த்து!

post image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) இன்று தனது 100-வது பயணத்தை குறிப்பிடத்தக்க மைல்கல்லாக எட்டியிருக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை 6:23 மணிக்கு NVS-02 - செயற்கைகோளை சுமந்து செல்லும் GSLV-F15 ஐ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த ஆண்டு விண்வெளிக்கு இஸ்ரோ அனுப்பிய முதல் விண்வெளிப் பயணமாகவும், சமீபத்தில் இஸ்ரோவின் தலைவராகப் பதவியேற்ற புதிய தலைவர் V.நாராயணனின் கீழ் நடத்தப்பட்ட தொடக்கமாகவும் அமைந்திருக்கிறது.

Geosynchronous Satellite Launch Vehicle (GSLV) இந்தியாவின் 17-வது பயணமாகவும், Indigenous Cryo stage-ன் 11-வது பயணமாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த விண்ணேற்றத்தைக் நேரில் காண மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த சாதனைக்கு இஸ்ரோவை வாழ்த்தி மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ``இந்த சாதனையின் வரலாற்று தருணத்தில் விண்வெளித் துறையுடன் இணைந்திருப்பது ஒரு பாக்கியம். ISRO, GSLV-F15 / NVS-02 மிஷன் வெற்றிகரமாக ஏவப்பட்டு இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த செயற்கைக் கோள், பூமியிருந்து 36,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவிசார் சுற்றுப்பாதையில் வைக்கப்படும். இதையும் சேர்த்தால் விண்வெளியில் நமது செயற்கைக் கோளின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்திருக்கிறது. செயற்கைக்கோளிலிருந்து நாம் பெறும் தகவல்களை இது மேலும் துல்லியப்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Asteroid: 2032-ல் பூமியில் மோதும் சிறுகோள்; இந்தியாவை பாதிக்குமா? -வானியலாளர்கள் சொல்வதென்ன?

"சமீபத்தில் கண்டறியப்பட்ட 60 மீட்டர் அகலமானதாக இருக்கும் சிறுகோள் (Asteroid) 2024 YR4, இன்னும் எட்டு ஆண்டுகளில் பூமிக்கு மிக நெருக்கமாக வரவுள்ளது. இது பூமி மீது மோதவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது" என்ற... மேலும் பார்க்க

Dooms Day Clock Explained : `89 விநாடிகளே...’ உலக அழிவுக்கு நெருக்கமாக இருக்கிறோமா?

Dooms Day Clock அல்லது இறுதிநாள் கடிகாரம் என்பது ஆண்டுக்கு ஒருமுறை பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் இணைந்து நேரத்தை நிர்ணயிக்கும் கடிகாரமாகும். இந்த கடிகாரத்தை 12 மணிக்கு நகர்த்தினால், அதாவது கடிகா... மேலும் பார்க்க

'வெறும் 3 அடி மனிதன் - உணவு பற்றாக்குறையா, மரபணு காரணமா?!' - ஆய்வு அவிழ்க்கும் முடிச்சுகள்!

உலகின் மிகச்சிறிய மனிதர்கள் குறித்தான ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அதன்படி, இந்தோனேஷியாவில் உள்ள ஃப்ளோரஸ் தீவில் குள்ளமான மனித இனம் இருந்ததற்கான சான்றாக புதைபடிவ எலும்புத் துண்டுகளை ஆராய்ச... மேலும் பார்க்க

Clownfish: 'பெண்ணாக மாறும் ஆண் மீன்' - நீமூவின் வாழ்க்கையும், டிஸ்னி மறைத்த உண்மையும்!

தி ஃபைண்டிங் நீமூ என்ற உலக புகழ்பெற்ற திரைப்படத்தை நாம் அனைவருமே பார்த்து ரசித்திருப்போம். அனிமேஷன் படங்களின் வரலாற்றில் அதொரு மைல்கல். பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் பவளப்பாறைகள் நிறைந்த பகுதிகள... மேலும் பார்க்க

Albatross: 5 ஆண்டுகள் தரை இறங்காமல் பறக்கும் பறவை; 40 ஆண்டுகள் வாழும் காதல் பறவையைத் தெரியுமா?

அல்பட்ரோஸ் ஒரு பெரிய கடல் பறவை. பசிபிக், அண்டார்டிகா, அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதிகளிலும் வசிக்கிறது.டியோமேடியா என்ற அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது அல்பட்ரோஸ். இந்த பறவைகள் வாழ்க்கையில் ஒரே... மேலும் பார்க்க

அதிசயம்: ஒரே நாளில் 7 கோள்களைக் காணமுடியுமா? - வானியல் ஆய்வாளர்கள் கூறுவதென்ன?

ஒரே நாளில் 7 வெவ்வேறு கோள்களை வானில் பார்க்கும் அதிசய நிகழ்வு நிகழவிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். நமது சூரியக் குடும்பத்தின் ஒவ்வொரு கோளும் தனித்தனி வேகத்தில் சூரியனைச் சுற்றி வ... மேலும் பார்க்க