விமானத்தில் ஏன் தேங்காய் எடுத்துச் செல்ல தடை தெரியுமா? - அறிவியல் சொல்லும் காரணம் இதுதான்!
விமானத்தில் பயணிகள் பயணிப்பதற்குப் பல்வேறு விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. பயணிகள் எதனை எடுத்துச் செல்லலாம், எதனை எடுத்துச் செல்லக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விமான நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. லைட்டர்கள், செல் பேட்டரிகள் போன்ற எரியக்கூடிய பொருள்கள் மற்றும் கத்தி போன்ற கூர்மையான பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன குறித்து நம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் விமானங்களில் காய்ந்த தேங்காய்யை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்பது குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஏன் விமானங்களில் இவற்றைத் தடை செய்யப்படுகின்றன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேங்காய்கள் கடினமான ஓடுகளையும் அதன் உள்ளே ஈரப்பதத்தையும் கொண்டிருக்கும். விமானம் பறக்கும் போது அதிக உயரத்தில் காற்றழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களால் தேங்காய் உடைய வாய்ப்பிருப்பதால் அதற்குத் தடை.
அதுமட்டுமின்றி விமான நிலையங்களில் திரவங்களை எடுத்துச் செல்வதற்குக் கடுமையான விதிகள் விதிக்கப்படுகின்றன. ஒரு தேங்காய் உள்ளே இருக்கும் திரவம் ஹேண்ட் பேக்குகளில் அனுமதிக்கப்படும் 100 மில்லி அளவைவிட அதிகமாக இருப்பதாலும் அது தடை செய்யப்படும் பொருட்களின் கீழ் வருகிறது. அதற்குள்ளே இருக்கும் திரவத்திற்குள் மறைத்து வைத்து ஏதேனும் எடுத்துச் செல்ல வாய்ப்பிருப்பதாலும் பயணிகள் காய்ந்த தேங்காயை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஆயுதங்களாகச் செயல்படக்கூடிய பொருட்கள் பொதுவாக விமானங்களில் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகின்றன. காய்ந்த தேங்காய்கள் கடினமான வெளிப்புற ஓடுகளைக் கொண்டுள்ளன. அவை ஆயுதங்களாகக் கூடப் பயன்படுத்தக்கூடும். விமானத்தைச் சேதப்படுத்தக் கூடும், இது பயணிகளை எந்த விதத்திலும் காயப்படுத்தி விடக் கூடாது என்பதில் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் கவனமாக உள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது விமான நிறுவனங்களின் கடுமையான விதிகளில் ஒன்றாகும்.
உலர்ந்த தேங்காய்களில் ஈரப்பதம் இருப்பதால் இது கேபின் காற்றின் தரத்தைக் கணிசமாக மாற்றக்கூடும் என்றும் விமான நிபுணர்கள் கூறுகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs