சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை
`இது புகையல்ல...' - விமானங்களுக்குப் பின்னால் வெள்ளை நிற கோடுகள் எப்படி உருவாகின்றன தெரியுமா?
வானத்தில் விமானங்கள் பறந்து செல்லும்போது அதற்கு பின்னால் வெள்ளை கோடுகள் தோன்றும், அதனை பலரும் விமானத்திலிருந்து வரும் புகை என்று நினைத்திருப்போம். ஆனால் அது உண்மையில் புகையல்ல...
பொதுவாக ஜெட் விமானங்கள் வானில் கடந்து செல்லும் போது வெள்ளை நிறத்தில் கோடுகள் தென்படுவதை புகை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் விமானத்தில் இருந்து புகை வெளியாவது இல்லை. ஜெட் போன்ற அதிவேக இன்ஜின் கொண்ட விமானங்களில் இருந்து நீராவி வெளியேற்றப்படுகிறது.

இந்த நீராவி வானின் குளிர்ந்த காற்றுடன் கலந்து பனித்துளியாக மாறி நமக்கு வெள்ளை கோடுகளாக காட்சியளிக்கின்றன. பூமியில் இருந்து பல்லாயிரம் அடி உயரத்தில் குளிர்ந்த சூழல் நிலவும். அதிவேகமாக செல்லும் ஜெட் விமானங்கள் சூடான நீராவியை வெளியேற்றும் போது இந்த குளிர்ந்த காற்றால் உறைந்து போய் இவ்வாறு காட்சியளிக்கின்றன.
இதனை கீழிலிருந்து பார்க்க விமானத்தில் இருந்து வெளியாகும் புகைப்போல் தெரிகிறது. அதே சமயத்தில் குளிர்ச்சியான சூழல் இல்லாதபோது இதுபோன்ற வெள்ளை கோடுகள் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.