ஆர்டிஃபெக்ஸ் நிறுவனத்தின் 80% பங்குகளை கையகப்படுத்தும் டாடா ஆட்டோகாம்ப்!
விமானத்தின் ஜன்னலில் இருக்கும் சிறிய துளை; எதற்காக இருக்கிறது தெரியுமா? - அறிவியல் காரணம் இதுதான்!
விமானத்தின் ஜன்னலில் ஒரு சிறிய துளை இருக்கும். இதற்கு பின்னால் இவ்வளவு பாதுகாப்பு காரணங்கள் இருக்கின்றன என்று பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
ஒரு விமானம் புறப்பட்டு உயரத்தில் பறக்கும் போது காற்றின் அழுத்தம் குறைகிறது. கேபினுக்கு உள்ளேயும் விமானத்திற்கு வெளியேயும் உள்ள காற்றின் அழுத்தத்தில் உள்ள வேறுபாடு விமானத்தின் மீது பெரிய அளவிலான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
விமானம் பறக்கும்போது கேபினுக்குள் இருக்கும் அழுத்தம், வெளியேயுள்ள அழுத்தத்தை விட அதிகமாக இருக்கும். இந்த அழுத்த வேறுபாட்டை சமன் செய்ய, ஜன்னலில் ஒரு சிறிய துளை வைக்கப்படுகிறது.

இந்த துளை, "bleed hole" அல்லது "pressure relief hole" என்று அழைக்கப்படுகிறது. இந்த துளை பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
திடீரென அழுத்தம் குறைந்தால், ஜன்னல் வெடித்து சிதறக்கூடும். இந்த துளை மூலம் அழுத்தம் மெதுவாக வெளியேறி, ஜன்னல் வெடிக்காமல் பாதுகாக்கப்படுகிறது.
மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், விமான ஜன்னல்களில் மூடுபனி படிவதை இந்த துளை தடுக்கிறது. கேபினின் உள்ளேயும் விமானத்திற்கு வெளியேயும் உள்ள வெப்பநிலை வேறுபட்டதாக காணப்படுகிறது. இந்த இடைவெளியில் இருந்து ஈரப்பதத்தை வெளியிடாவிட்டால் கீழே உள்ள பூமியின் அழகிய காட்சிகள் அந்த ஜன்னலில் நமக்கு மறைக்கப்படும். இந்த துளை மூலம் இது தடுக்கப்படுகிறது.