'அமெரிக்கா, சீனாவை முந்திய இந்தியா' - 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஜி.டி.பி இரட்டிப்பு!
'அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை விட, இந்தியாவின் வளர்ச்சி வேகமாக உள்ளது' என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை கூறுகிறது.
2015-ல்...2025-ல்...
சர்வதேச நிதியத்தின் அறிக்கைப்படி, "2015-ம் ஆண்டு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 2.1 டிரில்லியன் டாலராக இருந்தது. தற்போது இதன் மதிப்பு 4.3 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட 105 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவும், சீனாவும்!
2015 - 2025-ம் ஆண்டிற்குள்ளான, அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 66 சதவிகிதமாகவும், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 44 சதவிகிதமாகவும் தான் இருந்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவை விட, இந்தியாவின் வளர்ச்சி வேகமாக உள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தின் போது...
21-ம் ஆண்டு வரை, அதாவது கொரோனா பேரிடர் காலம் வரையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 டிரில்லியன் டாலராகத் தான் இருந்தது. ஆனால், அதன் பின்னர் வேகமெடுத்து 4 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது.
2015 டு 2025 காலக்கட்டத்தில், இது இரட்டிப்பு வளர்ச்சி ஆகும்.
இந்தியா மட்டுமல்ல...
இந்தியா மட்டுமல்ல, இந்தக் காலக்கட்டத்தில் மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகளும் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது.