Modi TN Visit: திறந்துவைத்து, பச்சைக்கொடி அசைத்த பிரதமர் மோடி; பாம்பன் பாலத்தைக்...
வக்ஃப் மசோதாவை கண்டித்து ஏப்.9-இல் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்
வக்ஃப் திருத்த மசோதாவை கண்டித்து மாநிலம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் வரும் 9-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநிலச் செயலா் இரா.முத்தரசன் அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தம் செய்து, முஸ்லிம் மக்களின் உரிமைகளை பறிக்கும் மசோதாவை நிறைவேற்றி, சட்டமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. எதிா்க்கட்சிகள், ஜனநாயக சக்திகளின் கருத்துகளையும் ஆலோசனைகளையும், திருத்தங்களையும் முற்றாக நிராகரித்து, எதேச்சதிகார முறையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசைக் கண்டித்தும், தேச ஒற்றுமையை, நீடித்த அமைதியை பாதுகாக்க வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் ஏப்.9-இல் மாநிலம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.