இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் எதற்கும் இலங்கை அனுமதிக்காது: அநுர திசந...
மெக்சிகோ: பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட முதல் சிறுமி
மெக்சிகோவில் மனிதருக்கு முதல் பறவைக் காய்ச்சல் நோயை உறுதி செய்துள்ளது.
மெக்சிகோவின் மேற்கத்திய மாநிலமான டுராங்கோவைச் சேர்ந்த மூன்று வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாட்டின் முதல் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் சாதாரண காய்ச்சலாகக் கருதி, காய்ச்சல் எதிர்ப்பு மருந்துடன் கூடிய சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுமிக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.
சிறுமிக்கு எவ்வாறு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், சிறுமியின் வீட்டருகே உள்ள பறவைகளை மருத்துவத்துறை அதிகாரிகள் சோதித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் விலங்குகள் மற்றும் மனிதர்கள் மூலமாக எச்5என்1 வகை இன்ச்ளூயன்சா பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கடந்தாண்டில் இருந்து அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் வழக்குகள் குறைந்தபட்சம் 70 வரையில் இருக்கலாம் என்று தெரிவிக்கிறது.
இதையும் படிக்க:ஊழியர்களின் கைகளில் ரத்தக் கறை: மைக்ரோசாஃப்ட் ஆண்டுவிழாவில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்