செய்திகள் :

இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் எதற்கும் இலங்கை அனுமதிக்காது: அநுர திசநாயக

post image

கொழும்பு: இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு விரோதமான முறையில் தனது பிரதேசத்தைப் பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று பிரதமர் மோடியிடம் அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக உறுதியளித்துள்ளார்.

அரசுமுறைப் பயணமாக பாங்காக் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை சென்றார்.

இன்று காலை தலைநகர் கொழும்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவுடன் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிறகு, இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இலங்கை அதிபர், இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையிலான எந்தச் செயலும் இலங்கை மண்ணில் நடக்காது என்று உறுதியளித்தார்.

மேலும், டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டின் முக்கியத்துவத்தை இலங்கை உணர்ந்திருக்கிறது. இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் சேவைக்காக இந்திய அரசு ரூ.300 கோடி தந்ததற்கு நன்றி என்று கூறினார்.

டிஜிட்டல் மயமாக்கலில் இருநாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவது குறித்தும் இரு நாட்டுத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க.. பிரதமருக்கு இலங்கையின் உயரிய விருது! திருக்குறள் மூலம் நன்றி சொன்ன மோடி!!

இந்தியா, சீனா பணக்கார நாடுகள்: அமெரிக்க வெளியுறவு அமைச்சா்

இந்தியா மற்றும் சீனாவும் பணக்கார நாடுகள் என்று தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ, ’மியான்மா் நிலநடுக்கத்துக்கு அமெரிக்கா தொடா்ந்து உதவத் தயாராக இருந்தாலும், இதுபோன்ற உலகளாவிய ... மேலும் பார்க்க

அமெரிக்கா: அமலுக்கு வந்தது பரஸ்பர வரி விதிப்பு

அனைத்து நாடுகளின் பொருள்களுக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சா்ச்சைக்குரிய பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது: சா்வதேச நாடுகளி... மேலும் பார்க்க

அமெரிக்கா: டிக்டாக்குக்கு மேலும் 75 நாள் அவகாசம்

தங்கள் நாட்டு விதிமுறைகளை நிறைவு செய்வதற்காக பிரபல விடியோ பகிா்வுச் செயலியான டிக்டாக்குக்கு அமெரிக்க அரசு மேலும் 75 நாள்கள் அவகாசம் அளித்துள்ளது. சீன நிறுவனமான பைட்டான்ஸுக்குச் சொந்தமான டிக்டாக் அமெரி... மேலும் பார்க்க

மியான்மா் உயிரிழப்பு 3,354-ஆக அதிகரிப்பு

மியான்மரில் மாா்ச் 28-ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,354-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இந்தப் பேரிடரில் 4,850 போ் காயமடைந்ததாகவும் சுமாா் 220 போ் மாயமாகி... மேலும் பார்க்க

இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 10,000 வீடுகள்: பிரதமர் மோடி வாக்குறுதி!

இலங்கை தமிழர்களுக்கு 10,000 வீடுகள், சுகாதார உள்கட்டமைப்புகள் கட்டித் தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஏப். 5) வாக்குறுதி அளித்துள்ளார்.தாய்லாந்தில் ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாட்டில் பங்கே... மேலும் பார்க்க

மனிதநேயம்..! மியான்மர் சென்றடைந்த 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள்!

நிலநடுக்கத்தால் நிலை குலைந்துள்ள மியான்மருக்கு இந்தியாவிலிருந்து கூடுதலாக 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.மியான்மரில் கடந்த வாரம் நிகழ்ந்த சக்திவாய்ந்த தொடா் நிலநடுக்கங்களால்... மேலும் பார்க்க